Monday, September 23, 2019

Transgender அரவாணிகள்

அன்புடையீர் வணக்கம்,

இந்த உலகத்தில் ஆண் பெண் அடுத்ததாக பிளஸ் மைனஸ், ப்ரோட்டான் நியூட்ரான், மேல் கீழ், வானம் பூமி இப்படி எல்லாமே இரண்டாக அதுவும் எதிரும் புதிருமாக படைக்கப்பட்டவை இதில் மூன்றாவதாக, 1 இடம் பிடிப்பது இல்லை.

அப்படித்தான் நம் சமூகத்தில், அரவாணி என்றும் திருநங்கைகள் என்றும், ஒரு பிரிவு உருவாகியுள்ளது.

இது பலபேர் கூறுவதுபோல் உலக நியதி அல்ல. இறைவன் அருளிய வரமும் அல்ல. மாற்றாக இது வளர்ப்பின், அடிப்படை
வளரும் விதமே...

காரண கூற்றாக ஒன்று,
நாம் நம் பிள்ளைகளை, வளர்க்கும் விதம் அன்பாகவும், கடினமாகவும் அவர்களுக்கு கற்றுத்தரும் விதமும் ஒரு காரணமாகும்.

ஒரு ஆண் பிள்ளை, அக்கம்பக்கத்தார் உடன் உள்ள பெண் பிள்ளைகளுடன், சிறுவயதில் இணைந்து விளையாடும் பழக்கம் இதுவும் ஒரு காரணம். பெண் பிள்ளைகளுடன் விளையாடுவதால்,
அவர்கள் பெண்களின் விளையாட்டையும் பெண்களின் அசைவுகளையும் பெண்களின் நாணங்களையும், கற்றுக்கொள்கிறார்கள்.

இதை நம் வீட்டில் அந்த குழந்தை செய்யும் பொழுது சிறு பிள்ளை செய்கிறது என்று விடுவதால் காலப்போக்கில் அவையே தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்ளும் அறியாமையில் விழுந்துவிடுகிறது.

நாம் எதைக் கற்றுத் தருகிறோமோ, அதைத்தான் குழந்தைகள் கற்றுக் கொள்ளும்.

நம் நாட்டில், ஒரு ஆண்குழந்தை அரவாணியாக மாறுவது, இங்கு இயல்பாக நடக்கின்றது. அந்த குழந்தைக்கு அரவாணி என்றும் திருநங்கை என்றும் ஒன்பது என்றும் அடைமொழியிட்டு கூறுகிறோம்.

இதுவே ஒரு பெண்பிள்ளை, தன்னை ஆணாக காட்டிக்கொண்டு ஆண் பிள்ளைத்தனமாக வீரதீர செயல்கள் செய்தால், அவற்றை பாராட்டுகிறோம்

ஆக பெண்பிள்ளை ஆணாக மாறினால்,
அந்த குழந்தையை அரவான் என்றா அழைக்கின்றோம் அல்லது திருநங்கன்,
என்றா அழைக்கிறோம்.

இல்லை இது சமுதாயக் கூற்று...

பிள்ளைகள் வளர்வதும் வாழ்வதும், சுற்றம் சூழலே காரணமாய் அமைகிறது.

இது ஒருவித மன மாற்றம்தான்.
இது உடல் கூறுகளின் வேறுபாடு அல்ல..

இறைவனால் படைக்கப்பட்ட இரண்டு சக்திக்கு உட்பட்டு வேறு சக்தி இல்லை..

ஆகவே குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் மிகக்கவனமாக சுதாரித்து
அவர்கள் போக்கை கவனித்து, மாற்றம் அளித்து வந்தால்,

அடுத்த தலைமுறைக்கு திருநங்கை என்ற ஒரு பெயர் வராது....

என்றும் அன்புடன்
*Usman studio

12 comments: