Friday, September 27, 2019

ஆன்லைன் பழக்கத்தினால்,

ஆன்லைன் பழக்கத்தால்,



என்னங்க.... என்னங்க,
கூப்பிட்டுக் கொண்டே இருக்கேன் ஏதாவது காதுல வாங்குறீங்களா...
ஏங்க, ஏங்க..‌

ஏண்டி காலங்காத்தால இப்படி, பேய் மாதிரி கத்துற..
மனுசன கொஞ்சமாவது தூங்கவிடுறீயா,

ஆமா, ராத்திரியெல்லாம் தூங்காம, அப்படி என்னதான் அந்த போன்ல இருக்கோ தெரியல, வர வர உங்க போக்கே சரியில்லங்க...

நான் என்னடி தப்பா பண்ணுறேன்.
ஃபோன் யூஸ் பண்ணுறது தப்பா...

சரி சரி, நான் இன்னைக்கு எங்க அண்ணன் வீட்டுக்கு போகணும்னு
சொன்னேன் ஞாபமிருக்கா...

அது எப்படி மறப்பேன் சீக்கிரம் கிளம்பு...

என்னங்க, பையனும், பொண்ணும் இந்த வாரம் லீவுக்கு வரலயாம்.
நானும் இரண்டு நாள் கழிச்சுதான், வருவேன்.   ஒழுங்கா சாப்பிடுங்க, அந்த போனயே பார்க்காம நேரத்துக்கு தூங்குங்க,

சரி சரி அதோ பஸ் வந்துடுச்சி, நீ கிளம்பு,
நான் பார்த்துக்குறேன்.

ஊருக்கு அனுப்பிவிட்டு ஜனகராஜ் போலே, மனதுக்குள் கத்தி கொண்டே
வீடு வந்தான்.

இன்றுதான், என்றும் இல்லாமல் நன்றாக நீண்ட நேரம் குளித்தான்‌.  காரணம்?

நெடுநாளாய் ஆன்லைனில் முகமறியா,
பெண்ணுடன் காதல் வயப்பட்டு, இதனால் தூக்கம் விட்டு, தன் நேரங்களை, வீண் செலவு செய்தான், அவளுக்காக....
இன்று அவள் இவனுடன் முதன்முதலில், வீடியோ அழைப்பு பேசுவதாக இருந்தது.

இன்னும் குளித்துகொண்டிருந்தான்,

ஃபோன் அலறியது.....

மிக வேகமாய் குளித்து, அலங்காரம் முடித்து, காத்திருந்தான்.

இப்போது குறுந்தகவல் மட்டுமே வந்தது.

டார்லிங் எங்க இருக்கிங்க என்று....

பதில் அனுப்பினான். இவ்வளவு நாள் பேசினாலும்,முதன்  முதலில் உன்னை பார்க்க போகிறேன்.
எனக்கு மறக்கமுடியாத அழகுடன் வா..
என்று..

மறுமுனை சிரித்தது..

ஊரே தூங்கும் வேளை,
மிக மொனமாய் அமைதி.
இவன் மூச்சுக்காற்று சுடானது. இதயம்
வேகமெடுத்து.

இப்போது நிசப்தமாய் அந்த போன் அலறியது.

இவன் ஆவலுடன் அந்த போனை எடுத்து,. ஆன் செய்தான்.

எதிரில், இவனுக்காக குறைந்த இளம் ஆடையனிந்த பெண்.

பார்த்த நேரத்தில், சற்று மூச்சற்று மயங்கி விழுந்தான்.

எதிர்முனையிலும், இதே நிலை...

ஆம் அது இவனின்,. சொந்த மகள்.......

நண்பர்களே, இது போன்று முகமறியா உறவு. நம் உறவினர் பெண்ணாக, கூட இருக்கலாம்.

தகாத நட்பு தற்கொலையாக கூட மாறலாம்.

அன்புடன்,
Usman studio


3 comments: