Sunday, September 22, 2019

Traffic rolls

வணக்கம் டிராபிக் ரூல்ஸ்.

தற்பொழுது, நமது அரசாங்கம் போக்குவரத்துத்துறை சட்ட திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்.
குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் அதற்கு ஒரு அபராதம். இரண்டு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் அதற்கு ஒரு அபராதம். இன்சூரன்ஸ் இல்லாமல் சென்றால் அதற்கும் ஒரு அபராதம்.இவையெல்லாம் தற்போது ஏடிஎம் மெஷின் ஆல் ஸ்வைப் செய்து அரசாங்கத்திற்கு நேரடியாக பணம் போகப்போகிறது.
அப்படி உங்களிடம் ஏடிஎம் கார்டு இல்லை என்றால் நீங்கள் இ-சேவை மையத்தில் அல்லது எஸ் பி ஐ வங்கிலோ, கட்ட வேண்டும் தவறினால் உங்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படும் அத்துடன் ஈபி பில் கட்ட முடியாது இப்படிப்பட்ட சட்டதிட்டங்களை சிறு மாற்றங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

500 ரூபாய் தண்டம் போட்டு 500 ரூபாய்க்கு ஒரு ஹெல்மெட்டை தந்தால், அடுத்த முறை அவர்களுடன் வருவார் மீண்டும் வந்தால் இச்சம்பவம் தொடரவேண்டும்.

இதேபோல் இன்சூரன்ஸ் விஷயத்திலும் செய்தால் அனைவரும் இன்சூரன்ஸ் உடன் இருப்பார்கள்.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது யார் தவறு அரசாங்கத்திடமிருந்து இது ஆரம்பிக்கிறது.
வீதிக்கு ஒரு டாஸ்மாக் எனும் அரக்கனை பிறக்க வைத்தது இந்த அரசாங்கம்.
அப்படி குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடிக்க வேண்டுமென்றால்,
ஒயின்ஷாப்பில் வாசலில் காவல் துறை அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும்.
இரண்டு சக்கர வாகனத்தில்
மூன்று பேர் சென்றால்,
பிடிக்கும் இந்த அரசு
முதலில் அரசு பேருந்துகளில் 52 பிளஸ் 2இரண்டு என்ற விகிதத்தில்,
பேருந்துகள் இயக்க படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
தனியார் பேருந்துகளிலும் இதே நிலை.

இந்தத் அண்டங்களை கட்டத் தவறினால் அரசாங்கம் ஈபி பில் கட்ட முடியாது என்று அறிவித்துள்ளது.

முதலில் அங்கு சென்று பார்ப்போம்.

மாதம் ஒருமுறை, ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் 100 யூனிட் உபயோகப்படுத்தினால், 100 ரூபாய் தான் கட்ட வேண்டும்.
100 யூனிட்டுக்கு மேல் சென்றால் இரண்டு ரூபாய் ஆகிறது.
இரண்டு மாதத்திற்கு 200 யூனிட்டுக்கு 400 ரூபாய் கட்டச் சொல்லும் பகல் கொள்ளை இங்குதான் நடக்கிறது.
இதில் தகவல் அறியும் சட்டமோ,
மனித உரிமை அமைப்புளோ,
எதிர்கட்சிகளோ கேட்பதில்லை...

மக்களுக்குத்தான் சட்டமே தவிர
சட்டம் மக்களை வதைக்க அல்ல...

இவையாவும் இங்கே அரங்கேறும் அரசாங்க ஞாயங்கள்....

இவன்,
Usman studio...


1 comment: