அம்மா தாயே....
ரொம்ப பசிக்குது ஏதாவது போடுங்கம்மா.....
யாரும் இல்ல போ...
யாரும் இல்லாமலா வீட்டில் குரல் மட்டும் வந்தது.
தன் விதியை நொந்துகொண்டு பிச்சைக்காரன். வீதியில் சென்று பிச்சை எடுத்தான்.
சற்று ஓய்வுக்காக மரநிழல் அருகே, நின்று கொண்டிருந்தான்.
கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி பிச்சை எடுக்கும் நிலைமை என்று பிதற்றிக் கொண்டிருந்தான்.
அப்போது உடல் வற்றிய நிலையில் ஒரு நாய், இவனைப் பார்த்து குரைத்தது.
கண் தெரியாத ஒருவர் தன் கை குச்சியால், அந்த நாயை சூ.. என்று விரட்டி விட்டு சென்றுகொண்டிருந்தார்.
அந்த நேரம் ஓர் ஆடம்பரமான கார் அவள் அருகே வந்தது.
அதில் இருந்த மனிதன் மிக அழகாக கம்பீரமாக தன் கார் கண்ணாடியை இறக்கி இவனுக்கு 100 ரூபாய் நோட்டை போட்டுவிட்டுச் சென்றார்.
மறுநாள் அதே இடம் அதே வண்டி வந்தது. இந்த முறை அந்த நபர் இவனுக்கு பத்து ரூபாய் போட்டுவிட்டு மீதி 90 ரூபாய் வாங்கி சென்றார்.
சில நாட்கள் இப்படியே போனது.
ஒருநாள் அந்த கார் வரவே இல்லை.
சரி இனி வராது என்று அவன் அங்கு நிற்பதை நிறுத்தி விட்டான்.
வேறுஊரில் பிச்சை எடுக்கலாம் என்று நினைத்து கிளம்பினான்.
இந்த நகரத்தில் உங்கள் வெகு பரபரப்பாக சுழன்று கொண்டிருந்தார்கள். இவன் தன் விதி நொந்தபடி பசியால் வாடினான்.
அப்போது அந்த கார் ஒரு உணவகம் அருகில் நிற்பதைக் கண்டான்.
ஓடிச் சென்று அருகில் நின்று கொண்டான். தனக்கு பிச்சை போட்ட இந்த மனிதர் வந்து கொண்டிருந்தார்.
இவன் சற்று ஆடி போனான். அவருக்கு இரு கால்களும் இல்லை. இவன் அருகில் வந்தவர். இவனுக்கு பத்து ரூபாய் கொடுத்து 90 ரூபாய் கேட்டார்.
இவன் ஐயா வேண்டாம் எனக்கு புத்தி வந்தது. இனி பிச்சை எடுக்க மாட்டேன் என்றான்.
ஏன் அப்படி என்று கேட்டார்.
இல்லை ஐயா,உடல் வற்றிய நிலையில் ஒரு நாயைக் கண்டேன். அது குரைப்பதை நிறுத்தவில்லை. கண் தெரியாத ஒருவர் அந்த நாயை சரியாக விரட்டினார். அவரின் பார்வையை கண்டேன்.
தாங்கள் கால்கள் இழந்த நிலையிலும் எனக்கு பசியாற பணம் தந்தது
என்னை திருத்தி விட்டது.
நானும் இனி உழைக்கப் போகிறேன் என்றான்.
அந்த மனிதர் ஒரு உண்டியல் எடுத்தார்.
அவனிடம் நீட்டினார்.
ஐயா, வேண்டாம் இனி பிச்சை வேண்டாம் என்றான்.
இது பிச்சை அல்ல நீ கொடுத்த மீதி 90 ரூபாய் தான். அதை உனக்காக சேர்த்து வைத்தேன். உன் உழைப்பிற்கு மூலதனமாக என் அன்பளிப்பு என்று விட்டுச் சென்றார்.
வாழ்க்கை உணர்ந்த பிச்சைக்காரன்
லட்சிய காரன் ஆனான்.
என்றும் அன்புடன்,
Usman studio

Excellent story beautiful end👌👌👌👌👌👌
ReplyDeleteWowwww....superr
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete