இப்படியும் ஒரு திருடன்...
அன்புடையீர் வணக்கம்...
அந்த ஊரில் மளிகைக் கடை வைத்து நடத்தும், ஒரு வியாபாரிக்கு, சிறு ஆசை எழும்பியது.
நாம் சொந்த வீடு ஒன்றை கட்ட வேண்டும் என்று.
அதற்காக தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம், சரியாக திட்டமிட்டு, ஒரு கட்டிடக் கலைஞர் ஒருவரை சந்தித்தார்.
அவரிடம் தன் இஷ்டப்படி ஒரு வீடு அமைக்க வரைபடம் வேண்டி கூறினார். வரைபடம் தயாரானது அக்ரிமென்ட் போடப்பட்டது சரியாக இன்றிலிருந்து, ஒருவருடத்தில் உங்களுக்கு இந்த வீடு கட்டித்தர படும் என்று.
நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றது.
வீடும் கட்டிமுடிக்கப்பட்டது. சொன்ன தேதியில், வீட்டின் சாவி தரப்பட்டது.
சொந்தங்களை அழைத்து, கிரகப்பிரவேசம் வைத்து, மகிழ்ந்தார், அந்த வியாபாரி.
ஒரு நாள் தன் சொந்த தேவைக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்று ஓரிரு வாரங்கள் தங்கிவிட்டு வந்தார்.
வந்து வீட்டை திறந்து பார்த்தவருக்கு,
அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் தம் வீடு முற்றிலும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
வீடு பூட்டிய படியே இருக்கிறது.
பின்புறம் திறக்கப்படவில்லை கண்ணாடி கதவுகள் உடைக்கபடவில்லை. போலீஸ் அதிகாரிகளே குழம்பி விட்டனர்.
அக்கம்பக்கத்தில் விசாரித்ததில்,
அங்கு திருடர்கள் வந்த சப்தமே இல்லாமல் இருந்திருக்கிறது.
அங்கே சற்றும் யோசிக்காமல் ஒரு சிறுவன், விளையாட்டாக கூறினான்.
மூன்று சாவி வைத்திருந்தால் நான் கூட தான் திறந்து இருப்பேன் என்று.
அப்போதுதான் அதிகாரிக்கு, பொறி தட்டி, அந்த கட்டிட வேலை இன்ஜினியரிடம், விசாரணை ஆரம்பமாகி, கட்டிட மேஸ்திரி இடம் விசாரித்து, அவரிடம் வேலை செய்த ஒருவன் கதவிற்கு சாவி செய்யும் பொழுதே, இன்னொரு சாவியும் செய்திருக்கிறான்.
பின்னாளில் அவனே அந்த வீட்டை கொள்ளை அடித்து இருக்கிறான்.
இப்படியும் திருட்டு நவீன மயமாக்கப்பட்டுள்ளது.
ஆகவே சொந்த வீடு கட்டுபவர்கள்
தானே சொந்தமாக பூட்டு சாவி வாங்கி அதை மாற்றும் வரை கவனமாய் இருந்து சாவிகளை பெற்றுக்கொள்வது, மிகச் சிறந்தது.
விழிப்புணர்வுடன் இருப்போம்,
பிறருக்கு பகிர்வோம்...
என்றும் அன்புடன்,
Usmanstudio...

சுவாரசியமான நிகழ்வு...
ReplyDeleteஅடுத்த பதிவு சுவை மங்காமல் வளரும்..
Deleteஎன்னமா யோசிக்கிறானுங்க
ReplyDelete