Wednesday, September 25, 2019

உங்கள் பெண்கள் பாதுகாப்பில்லை

அன்புடையீர் வணக்கம்,


காலை வேளை 11மணி இருக்கும்,

அக்கா... அக்கா.
காலிங் பெல் குரல்,
உள்ளிருந்து குரல் வந்தது.
யாரு..
அந்த சிகப்பு சட்டை போட்ட
ஆசாமி,
அக்கா வணக்கம், நாங்க கேஸ்
ஏஜென்சியில் இருந்து வரோம்.
ஆமா நீங்க என்ன ஏஜென்சி கேஸ்
யூஸ் பண்ணுறீங்க...

நாங்க _______கேஸ்தான் யூஸ் பண்ணுறோம்.

நல்லதாபோச்சு, நாங்களும் அந்த ஏஜென்சில இருந்து தான் வரோம்.

அக்கா நாங்க இந்த ஸ்டவ் பர்னர், ரெகுலேட்டர் செக்கப்க்கு வந்து
இருக்கோம்.
செக் பண்ணலாமா...

சற்றும் சந்தேகம் வராதபடி தன் ஐடி கார்டை, தொங்க விட்டபடி சரளமாக பேசினான் அந்த நபர்.

கொஞ்சம் கூட தாமதிக்காமல்,
அக்கா உங்க கேஸ் புக் எடுத்து வாங்க,
உங்க பேர் லட்சுமி தானே, இரண்டு சிலிண்டரா அல்லது ஒன்றா, என்று
கேள்விகளை அடுக்கி வைத்து,

நம்பிக்கை வரவழைத்தான். பின்பு
கேஸ் புக்கை செக் செய்துவிட்டு,
சிலிண்டர் பார்த்து விடலாமா. என்று
அனுமதியுடன் உள்ளே சென்று, சில
பாசாங்கினை செய்து,

சரியாத்தான் இருக்கு, இந்த ஜன்னல்கள்
மட்டும் சாத்துங்கள். லீக் முழுவதுமாக செக் பண்ணிடலாம் என்று ஏதோ ஓர் மீட்டரை கையிலெடுத்தான்.

அதை உண்மையென்று நம்பிய அந்த
பெண்மணி ஜன்னல் சாத்த திரும்பிய
போதுதான்,

அவன் தன் கைவரிசை காட்டி, கத்தியை நீட்ட அந்த பெண் அலற முயற்ச்சிக்கிறாள்.  அவள் தொண்டை
அறுக்கப்பட்டு விழுகிறாள்...

இது கேபிள், கேஸ், டெலிபோன் சர்வீஸ்
என்று வேறு வழிகளில் கூட வரும்..

இப்படித்தான் விழிப்புணர்வு, இல்லாமல்
பெண்களை குறிவைக்கபடுகிறார்கள்.

அவர்களுக்கு எச்சரிக்கை மணி
அடித்து, விழிப்புணர்வு தருவோம்.

அன்புடன்
Usman studio...

8 comments:

  1. விழிப்புணர்வூட்டும் பதிவு அண்ணா.... மேலும் இதுபோன்ற பதிவுகளை பதிவிடுங்கள்

    ReplyDelete
  2. தீனா மிக்க நன்றி, அடிக்கடி வாருங்கள். வித்தியாச வாசிப்பை காணலாம்.

    ReplyDelete
  3. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டாம்.

    ReplyDelete
  4. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டாம்.

    ReplyDelete
  5. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டாம்.

    ReplyDelete
  6. Replies
    1. இனி வரும் பதிவுகளை தொடர்ச்சியாக காணுங்கள்

      Delete