Tuesday, September 24, 2019

Agriculture விவசாயம்


அன்புடையீர் வணக்கம்...

ஒரு தாய் தன் பிள்ளையை, சுமந்து வலி கண்டு, உயிர் பிறக்கும் நேரம்,
அவள் கண்களின் ஓரம்,
ஓர் பாச போராட்ட அலை,
ஓய்ந்து, அவளின் விழிகள்,
ஒருக்க படுத்து நீர் ததும்ப
 கிடைக்கும் ஆனந்தம் போல்,

தூக்கம் விட்டு,
துயர்பட்டு,
கடன்பட்டு
விதை வாங்கி,
ஏறிட்டு. நடவமைத்து,
மழைக்கு காத்து,
மண்ணை பார்த்து,
ஏக்கப் பட்டு,
பூத்தவுடன்,
அவனின் ஆனந்தம் அப்படியே
நான் மலடி இல்லையென்ற
கூக்குரலின் ஆரம்பம்...

உணவை படைத்தவன் கடவுள்
இவனுக்கு மரணத்தை மட்டுமே
தரும் நம் சமூகம்..

ஐந்துரூபாய் நொருக்குதீனி கூட
அவன் வைக்கும் விலை,

இங்கே தன் பிள்ளைக்கு, விலைபேர் கூட,வைக்க முடியாத நிலை விவசாயிக்கு..

லட்சகோடிகள் கடன்பட்டவன்
லட்சணமாய் வாழ்கிறான்...

நமக்கெல்லாம் சோறு போட்டவன்
கடனுக்காய் சாகிறான்...

பிறப்புரிமை சிறப்புரிமை இல்லை
அவர்களுக்கு, இறப்புரிமையே வாழை
போல் விவசாயம் இவர்களுக்கு...

நம்மாள் இவர்களுக்கு உதவ முடியுமா?
நிச்சயமாக முடியும்.

நம் உடலுக்கு நலன் பயக்கும்,விவசாயின் பயிரை அதிகம்
வாங்க வேண்டும்..‌.
கடைதனில், ஆர்கானிக் பயிர்களை கேட்டுகொண்டே இருங்கள்.
அதன் விளைச்சலுக்கு அங்கீகாரம் கிடைக்கும். முடிந்தவரை வாழ்நாளில் ஒரு மரமாகும் செடியாவது நடுங்கள்‌.

நல்ல காற்று உங்களுக்கு,
வான்மழையோ விவசாயிக்கு.

சோறுடைத்த சோழ நாடு,
வேறருத்து போவதில்,
காதறுந்த காதலிக்கு,
திருகாணி தேடுவதை போல்
ஆகிவிடும்...

காப்போம் நம் தலைமுறையை,
விவசாயம் நம் உயிர் சாயம்...


என்றும் அன்புடன்,
Usman studio...

10 comments:

  1. Replies
    1. நன்றி நண்பரே அடிக்கடி இணைந்திருங்கள்.

      Delete
  2. விளையும் பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியது சரிதான். ஆனால் விலை விவசாயிதான் வைக்கவேண்டும்.

      Delete
  3. Replies
    1. நன்றி, அடுத்தவருக்கு தெரியப்படுத்துங்கள்

      Delete
  4. Replies
    1. உங்கள் வருகையே என் பதிவின், தொடக்கம்...

      Delete